sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இந்தியா வந்தடைந்த அப்பாச்சி ஹெலிகாப்டரின் சிறப்புகள் என்ன?

/

இந்தியா வந்தடைந்த அப்பாச்சி ஹெலிகாப்டரின் சிறப்புகள் என்ன?

இந்தியா வந்தடைந்த அப்பாச்சி ஹெலிகாப்டரின் சிறப்புகள் என்ன?

இந்தியா வந்தடைந்த அப்பாச்சி ஹெலிகாப்டரின் சிறப்புகள் என்ன?

2


ADDED : ஜூலை 22, 2025 06:04 PM

Google News

2

ADDED : ஜூலை 22, 2025 06:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: இந்திய ராணுவத்தின் தாக்குதல் திறனை அதிகரிக்கவும், உளவு நடவிக்கைகளுக்காகவும், ஒப்பந்தம் செய்யப்பட்ட அப்பாச்சி ஹெலிகாப்டர்கள், அமெரிக்காவில் இருந்து இன்று இந்தியா வந்தடைந்தன. இந்த ஹெலிகாப்டர்கள், ஹிண்டன் விமான படை தளத்தில் தரையிறங்கின.

ஏற்கனவே, இந்திய விமானப்படையிடம் 22 ஹெலிகாப்டர்கள் உள்ள நிலையில், தற்போது இவை இந்திய ராணுவத்துக்காக வாங்கப்பட்டுள்ளது. இவை பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதிகளில் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன் சிறப்பம்சங்கள்

1.அப்பாச்சி ஹெலிகாப்டரில் 2 பேர் பயணிக்க முடியும். மொத்தம் 10,432 கிலோ எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டது.

2.இந்த ஹெலிகாப்டர் ட்ரோன்களை கட்டுப்படுத்த திறன் கொண்டது. இதில் T700-GE-701D இன்ஜின்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

3. முழுமையான ஒருங்கிணைந்த மற்றும் தாக்குதலுக்கு உகந்த ஹெலிகாப்டர் என அதனை தயாரிக்கும் போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

4.இந்த ஹெலிகாப்டர்களை, தாக்குதலுக்கு மட்டுமின்றி, உளவு, பாதுகாப்பு மற்றும் அமைதி நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்த முடியும்.

5.இரவு நேரத்திலும் செயல்படும் நேவிகேசன் அமைப்பு உள்ளது. இது ராணுவ தாக்குதல் திறன்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

6.இந்த ஹெலிகாப்டரில் பொருத்தப்பட்டு உள்ள அதிநவீன தொழில்நுட்பங்கள், அனைத்து வானிலை மற்றும் பருவநிலைகளிலும், இலக்கை பற்றிய துல்லியமான தகவல்களை தருகின்றன.

7.அப்பாச்சி ஹெலிகாப்டர்கள், அதிநவீன கட்டமைப்பு கொண்டதுடன், போர்க்களத்தில் பல முனை நடவடிக்கைகளுக்கு பயன்படும். ராணுவத்தின் நிலம், கடல், வான்வெளி, விண்வெளி மற்றும் சைபர் தலங்களில் குறிப்பிட்ட இலக்குகளை எட்டுவதற்கு ராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு உதவியாக இருக்கும்.

8.அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் நெட்வொர்க்-மையப்படுத்ததிய, முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட ஆயுத அமைப்பைக் கொண்டுள்ளன. விமானத்தின் சென்சார்கள், மென்பொருள் மற்றும் ஆயுத செயல்திறன் ஆகியவற்றில் பல மேம்பாடுகள் இதில் அடங்கும்.

9.ஆன்போர்டு மற்றும் ஆப் போர்டு சென்சார்கள், ஆயுதங்கள் மற்றும் அனைத்து கருவிகளையும் பயன்படுத்துவதற்கு தேவையான கருவிகளை பயன்படுத்துவதற்கு தேவையான அமைப்புகள் மூலம் மேம்பட்ட திறன்களை வழங்கவும், ஒருங்கிணைக்கும் வசதி இதில் உள்ளது.

இதுவரை வாங்கிய நாடுகள்

இந்த ஹெலிகாப்டர்களை கடந்த 1984 ஜன., மாதம் அமெரிக்காவிடம் போயிங் நிறுவனம் வழங்கியது. இதன் பிறகு, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் 2700 ஹெலிகாப்டர்களை வாங்கி உள்ளன. இதனை தயாரிக்கும் போயிங் நிறுவனத்தின் வாடிக்கையாளராக அமெரிக்கா, இந்தியா, எகிப்து, கிரீஸ், இந்தோனேசியா, இஸ்ரேல், ஜப்பான், தென் கொரியா, குவைத், நெதர்லாந்து, கத்தார், சவுதி அரேபியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் உள்ளன.








      Dinamalar
      Follow us