ADDED : அக் 01, 2024 07:30 PM
புதுடில்லி:தெற்கு டில்லி சத்தர்பூரில், 44 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
மெஹ்ராலி போலீசுக்கு நேற்று முன் தினம் மாலை போன் செய்த ஒருவர், சத்தர்பூரில் பூட்டியிருக்கும் ஒரு வீட்டுக்குள் இருந்து கதவு இடுக்கு வழியாக ரத்தம் கசிவதாக கூறினார். போலீசார் விரைந்து சென்றனர். அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் இருந்த அந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு, ஒரு ஆண் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. முதற்கட்ட விசாரணையில் அவர் பெயர் அகில்,44, என்பது தெரிய வந்துள்ளது. படிக்கட்டில் தவறி விழுந்ததால் மரணம் அடைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அகில் குடும்பத்தினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க நான்கு நாட்களுக்கு முன் வெளியூர் சென்றனர். உடற்கூறு ஆய்வுக்காக அகில் உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விசாரணை நடக்கிறது.

