கேரளாவில் வலுக்கும் கனமழை; 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
கேரளாவில் வலுக்கும் கனமழை; 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
ADDED : மே 02, 2025 09:04 PM

திருவனந்தபுரம்; கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
கேரளாவில் தொடர்ந்து கனமழை கொட்டி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் பெய்த மழையால் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது.
கோழிக்கோடு தாமரச்சேரி உள்ளிட்ட பல இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை கொட்டியது.
மழை மேலும் நீடித்து வருவதால் திருவனந்தபுரம், கண்ணூர், காசர்கோடு, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம் ஆகிய 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
பத்தனம்திட்டா, மலப்புரம், பாலக்காடு, கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கையும், கொல்லம், ஆலப்புழா மற்றும் திருச்சூர் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது.