தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ கல்வித்துறை போட்டி பதிவு செய்யுங்க

கல்வித்துறை போட்டி பதிவு செய்யுங்க

கல்வித்துறை போட்டி பதிவு செய்யுங்க


ADDED : நவ 01, 2024 07:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 01, 2024 07:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பள்ளி கல்வித்துறை, 2024 - 25ம் ஆண்டின், 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர் - சிறுமியருக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நவம்பர் 15, 16ம் தேதி நடக்கவுள்ளது.

ஷிவமொக்கா மாவட்ட கல்வித்துறை வெளியிட்ட அறிக்கை:

ஷிவமொக்கா மாவட்ட பள்ளி கல்வித்துறை, நவம்பர் 15 மற்றும் 16ம் தேதிகளில், 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர் - சிறுமியருக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளை நடத்தவுள்ளன. ஷிவமொக்காவின், நேரு விளையாட்டு அரங்கில் இப்போட்டிகள் நடக்கும்.

போட்டிகளில் பங்கேற்க விரும்பும், மாநிலத்தின் அனைத்து அரசு பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும், பெறாத தனியார் பள்ளிகள் தொடக்கப் பள்ளிகளின் மாணவ - மாணவியர் நவம்பர் 14க்குள் தங்கள் பெயரை, பதிவு செய்து கொள்ள வேண்டும்.

கூடுதல் தகவலுக்காக, கல்வி அதிகாரி பிரகாஷின் 94489 64356 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது - நமது நிருபர் -.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us