UPDATED : மார் 16, 2025 01:19 AM
ADDED : மார் 16, 2025 01:05 AM
திருவனந்தபுரம்:கண்ணுாரில், 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம், கண்ணுாரைச் சேர்ந்த 12 வயது சிறுமி, பள்ளி வகுப்பில் கவனக்குறைவாக இருந்துள்ளார்.
ஆசிரியை
அவரை அழைத்து பையை சோதனை செய்தபோது, அதில் மொபைல் போன் இருந்தது. இது
பற்றி பெற்றோருக்கு தெரிவித்து, சைல்டு லைன் அமைப்பின் உதவியுடன் மேல்
விசாரணை நடத்தப்பட்டது.
இதில், அந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு
ஆளாகி இருந்ததும், அவரது உறவுக்கார பெண்ணே இதில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
பலமுறை அந்த பெண், தன்னிடம் அத்துமீறி நடந்ததாக சிறுமி அதிகாரிகளிடம்
தெரிவித்தார்.
வீட்டில் அத்துமீறி நுழைதல், போக்சோ உள்ளிட்ட
பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பெண்ணை கைது செய்தனர்.
அப்பெண் மீது ஏற்கனவே 14 வயது சிறுவனை பாலியல் ரீதியாக
துன்புறுத்தியதாகவும், வீடியோக்களை காட்டி மிரட்டியதாகவும் புகார்
இருப்பதாக போலீசார் கூறினர்.