கேள்விகளால் ராகுலை வெளுத்து வாங்கிய சுப்ரீம் கோர்ட்
கேள்விகளால் ராகுலை வெளுத்து வாங்கிய சுப்ரீம் கோர்ட்
UPDATED : ஆக 04, 2025 02:05 PM
ADDED : ஆக 04, 2025 12:14 PM

புதுடில்லி: சீனா விவகாரம் தொடர்பாக காங்., எம்பி ராகுல் எழுப்பிய சந்தேகங்களுக்கு சுப்ரீம் கோர்ட் கடுமையான கேள்விகளை எழுப்பி உள்ளது. நீங்கள் ஒரு உண்மையான இந்தியராக இருந்தால் இவ்வாறு பேச மாட்டீர்கள் என கடுமையாக சாடி உள்ளது.
சீனா , இந்தியா இடையிலான மோதல் மற்றும் சீனாவால் இந்திய எல்லை பகுதி ஆக்கிரமிக்கப்பட்ட பிரச்சனை குறித்து காங்., முன்னாள் தலைவர் ராகுல் கடும் கேள்விகளை எழுப்பினார். சீன வீரர்கள் இந்திய வீரர்களை அடித்து கொண்டிருந்த போது , எல்லையில் இந்தியா மீதான சீனாவின் தாக்குதல் குறித்து யாரும் பேசாமல் எனது பாரத் யாத்திரை குறித்து கேள்வி எழுப்புகின்றனர் என்றார். இந்திய ராணுவத்தை அவதூறாக பேசியதாக லக்னோ கோர்ட்டில் ராகுலுக்கு எதிரான வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்கு விசாரணைக்கு தடை கோரிய மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடந்தது.மனுவை விசாரித்த நீதிபதிகள் தீபன்கர்தத்தா, ஏஜி மாய்ஸ், ராகுல் குறித்து கடுமையாக கேள்விகள் எழுப்பினர்.
உண்மையான இந்தியரா ?
* ஒரு எதிர்கட்சி தலைவராக இருக்கும் நீங்கள் ஏன் இது போன்ற விஷயங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுகிறீர்கள், இப்படி செய்யலாமா ? இதனை பார்லி.,யில் எழுப்ப வேண்டியது தானே ?
* உங்களிடம் ஏதும் நம்பத்தகுந்த ஆதாரங்கள் உள்ளனவா ? * கருத்து சுதந்திரம் என்ற பெயரில் எதையும் பேசக்கூடாது.
இத்தனை கேள்விகளுடன் உ.பி., அரசுக்கு நோட்டீஸ் வழங்கவும், லக்னோ கோர்ட் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர் .

