நாட்டில் நல்லிணக்கத்தை வலுப்படுத்தணும்: பிரதமர் மோடி வேண்டுகோள்
நாட்டில் நல்லிணக்கத்தை வலுப்படுத்தணும்: பிரதமர் மோடி வேண்டுகோள்
ADDED : ஆக 14, 2025 10:29 AM

புதுடில்லி: நாட்டில் நல்லிணக்கத்தை வலுப்படுத்த வேண்டும் என மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவில் இருந்து 1947 ஆக.14ல் பாகிஸ்தான் பிரிக்கப்பட்டது. அப்போது நிகழ்ந்தவன்முறை, வெறுப்பு, துன்புறுத்தல்கள் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.
நம் மக்களின் போராட்டங்கள், தியாகங்களின் நினைவாகவும், தேச ஒற்றுமை, சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக மத்திய அரசு சார்பில் ஆக.14ல் பிரிவினை கொடுமையின் நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: நமது வரலாற்றின் அந்த துயரமான அத்தியாயத்தில் எண்ணற்ற மக்கள் அனுபவித்த எழுச்சி மற்றும் வலியை நினைவுகூரும் வகையில், இந்தியாபிரிவினை கொடுமையின் நினைவு தினத்தை அனுசரிக்கிறது.
அவர்களின் மன உறுதியை மதிக்கும் ஒரு நாளாகவும் இது அமைகிறது. கற்பனை செய்ய முடியாத இழப்பை எதிர்கொண்டனர். பாதிக்கப்பட்டவர்களில் பலர் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பவும் குறிப்பிடத்தக்க மைல்கற்களை அடையவும் வேறு இடத்திற்கு சென்றனர்.
இந்த நாள் நமது நாட்டை ஒன்றாக வைத்திருக்கும் நல்லிணக்கத்தினை வலுப்படுத்துவதற்கான நமது பொறுப்பை நினைவூட்டுகிறது. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.