ஹனுமன் கொடி அகற்றம்: கர்நாடகாவில் பரவும் போராட்டம்
ஹனுமன் கொடி அகற்றம்: கர்நாடகாவில் பரவும் போராட்டம்
ADDED : ஜன 29, 2024 12:30 PM

பெங்களூரூ: ஹனுமன் பொறித்த காவி கொடியை அரசு அதிகாரிகள் அகற்றியதால் எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டம் கர்நாடகாவில் பல இடங்களில் நடந்து வருகிறது.
மாண்டியா மாவட்டம் கெரேகோடு கிராமத்தில் ஆஞ்சநேயர் உருவம் பொறித்த காவி கொடியை அப்பகுதி மக்களும், ஹிந்து அமைப்பினரும் 108 உயர கொடிக்கம்பத்தில் ஏற்றினர். ஆனால் அரசு இடத்தில் ஏற்றப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் அகற்றினர்.
இதனைக் கண்டித்து, அரசுக்கு எதிராக ஹிந்து அமைப்பினர் நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர். அதிகாரிகள் சமரசம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இதனையைத்து போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். இதில் பலர் காயமுற்றனர். தொடர்ந்து அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.
இந்நிலையில் அரசை கண்டித்து கெரேகோடு கிராமத்தில் இருந்து மண்டியா கலெக்டர் அலுவலகம் நோக்கி 14 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஹிந்து அமைப்பினர், பா.ஜ., வினர் ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர்.
இதுபோல் பெங்களூரு மைசூர் வங்கி சதுக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பா. ஜ., வினர் கைது செய்யப்பட்டனர்.