sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வருமான வரி சட்டத்தில் குழப்பங்கள் நீக்கம் எளிமையாகிறது!: திருத்த மசோதா லோக்சபாவில் நிறைவேறியது

/

வருமான வரி சட்டத்தில் குழப்பங்கள் நீக்கம் எளிமையாகிறது!: திருத்த மசோதா லோக்சபாவில் நிறைவேறியது

வருமான வரி சட்டத்தில் குழப்பங்கள் நீக்கம் எளிமையாகிறது!: திருத்த மசோதா லோக்சபாவில் நிறைவேறியது

வருமான வரி சட்டத்தில் குழப்பங்கள் நீக்கம் எளிமையாகிறது!: திருத்த மசோதா லோக்சபாவில் நிறைவேறியது


UPDATED : ஆக 12, 2025 07:30 PM

ADDED : ஆக 12, 2025 03:12 AM

Google News

UPDATED : ஆக 12, 2025 07:30 PM ADDED : ஆக 12, 2025 03:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: புதிய வருமான வரி மசோதா லோக்சபாவில் விவாதமின்றி நேற்று நிறைவேற்றப்பட்டது. திருத்தப்பட்ட புதிய வருமான வரி மசோதாவை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது, பீஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டதால், விவாதமின்றி மசோதா நிறைவேறியது.

கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக நாடு முழுதும் அமலில் இருந்த வருமான வரி சட்டத்துக்கு மாற்றாக புதிய சட்டம் இயற்றப்பட்டது. பழைய சட்டத்தில் இருந்த பல சிக்கலான நடைமுறைகள் களையப்பட்டு, எளிமைப்படுத்திய வடிவில் புதிய வருமான வரி மசோதா - 2025 இயற்றப்பட்டது.

இதையடுத்து இம்மசோதாவை, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்., 13ம் தேதி லோக்சபாவில் அறிமுகம் செய்தார். அப்போது, பல்வேறு மாற்றங்களை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்ததால், தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டது.

அபராத கட்டணம் பா.ஜ.,வைச் சேர்ந்த ஸ்ரீ பைஜெயந்த் பாண்டா தலைமையிலான 31 உறுப்பினர்கள் கொண்ட இந்த குழு, 4,575 பக்கங்கள் கொண்ட 285 பரிந்துரைகளை வழங்கியது. புதிய வருமான வரிச் சட்டத்தில் மத மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் பெயர் குறிப்பிடாத நன்கொடைகளுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும்.

வரி செலுத்துவோர், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டிய தேதிக்குப் பின்னரும் அபராதக் கட்டணம் செலுத்தாமல், டி.டி.எஸ்., எனப்படும் முன்கூட்டியே பிடித்த வரி பணத்தை திரும்ப பெற அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பரிந்துரைகள் வழங்கப்பட்டன.

இதையடுத்து அனைத்து பரிந்துரைகளையும் உள்ளடக்கிய திருத்தப்பட்ட புதிய வருமான வரி மசோதா, லோக்சபாவில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இம்மசோதாவை தாக்கல் செய்து மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:

கடந்த 1961ல் இருந்து அமலில் இருக்கும் வருமான வரி சட்டத்திற்கு மாற்றாக, இந்த புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. வருமான வரி விதிகளை ஒழுங்குபடுத்துவதே இச்சட்டம் கொண்டு வரப்பட்டதின் முக்கிய நோக்கம். கிட்டத்தட்ட, தேர்வுக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் ஏற்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் பேசினார்.

மசோதாவை நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தபோது, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அனைவரும் பீஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பிக் கொண்டிருந்தனர்.

ஒத்திவைப்பு

இதனால் கடும் அமளி ஏற்பட்ட நிலையில், விவாதமின்றி இம்மசோதா நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, 2026 ஏப்ரல் 1ம் தேதி முதல் புதிய வருமான வரி சட்டம் அமலுக்கு வருகிறது.

அதே போல், வரி விதிப்பு சட்ட திருத்த மசோதாவும் அறிமுகம் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்ட பயனாளிகளுக்கு வரியில் இருந்து விலக்கு அளிப்பதற்கு, இந்த சட்ட திருத்த மசோதா வழிவகை செய்கிறது. இரு மசோதாக்களும் விவாதமின்றி குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேறியதும், லோக்சபா நாள் முழுதும் ஒத்திவைக்கப்பட்டது.

மசோதாவின் சிறப்பம்சங்கள்

* வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற் கான கால அவகாசம் முடிந்த பின்னரும், அபராதம் செலுத்தாமல் டி.டி.எஸ்., எனப்படும் முன்கூட்டியே பிடித்த வரித் தொகை யை திரும்ப பெற முடியும்.
* பழைய வருமான வரி சட்டத்தில் இருந்த வார்த்தைகள், அத்தியாயங்கள், புதிய வருமான வரி சட்டத்தில் பாதியாக குறைக்கப்பட்டுள்ளன.

* மக்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் உட்பிரிவுகள் எளிமையாக்கப்பட்டுள்ளன.
* பழைய சட்டத்தில் முந்தைய ஆண்டு மற்றும் மதிப்பீட்டு ஆண்டு என குறிப்பிடப்பட்டிருந்தது. இது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தி வந்த நிலையில், அனைவரும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில், 'வரி ஆண்டு' என்ற வார்த்தை மட்டுமே இனி பயன்படுத்தப்படும்.
* எல்.ஐ.சி., ஓய்வூதிய நிதி போன்ற குறிப்பிட்ட நிதி திட்டங்களில் இருந்து கிடைக்கும் கணிசமான தொகைக்கு, இனி முழுமையாக வரி விலக்கு கிடைக்கும் குறு மற்றும் சிறு நிறுவனங்களின் வரி வரையறைகள் சீரமைக்கப்பட்டுள்ளன.








      Dinamalar
      Follow us