நமோ பாரத் ரேபிட் என பெயர் மாற்றப்பட்டது வந்தே மெட்ரோ ரயில்; சிறப்பு அம்சங்கள் ஏராளம்
நமோ பாரத் ரேபிட் என பெயர் மாற்றப்பட்டது வந்தே மெட்ரோ ரயில்; சிறப்பு அம்சங்கள் ஏராளம்
UPDATED : செப் 16, 2024 06:48 PM
ADDED : செப் 16, 2024 03:24 PM

ஆமதாபாத்: வந்தே பாரத் ரயில்களைத் தொடர்ந்து வந்தே மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார்.
குஜராத் மாநிலம் புஜ் - ஆமதாபாத் இடையே இயக்கப்படும் இந்த ரயிலின் பெயரை, நமோ பாரத் ரேபிட் ரயில் என ரயில்வேத்துறை பெயர் மாற்றம் செய்துள்ளது.
பிராந்திய நகரங்களை இணைக்கும் நோக்கத்தில், வழக்கமாக இயக்கப்படும் ரயில்களுக்கு மாற்றாக இந்த ரயில்கள் இருக்கும். மக்கள் அதிகம் கூடும் நகரங்களுக்கு இடையே இயக்கப்பட உள்ளது.
இந்த ரயிலின் சிறப்பு அம்சங்கள்
*நமோ பாரத் ரயிலில் 12 பெட்டிகள் இருக்கும். 1,150 பயணிகள் பயணம் செய்யலாம்.
*புஜ் முதல் ஆமதாபாத் இடையிலான 359 கி.மீ., தூரத்தை 5:45 மணி நேரத்தில் கடந்து விடும்
*9 ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
*இந்த ரயில் இன்று துவக்கப்பட்டாலும், வழக்கமான பயணிகள் சேவை நாளை தான் துவங்குகிறது.
*இந்த ரயிலில் பயணிக்க கட்டணம் ரூ.455
*பெட்டிகள் முழுதும் ஏசி வசதி செய்யப்பட்டு உள்ளது.