sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பிரஜ்வல் வழக்கை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்க கோரிக்கை

/

பிரஜ்வல் வழக்கை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்க கோரிக்கை

பிரஜ்வல் வழக்கை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்க கோரிக்கை

பிரஜ்வல் வழக்கை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்க கோரிக்கை


ADDED : மே 10, 2024 05:25 AM

Google News

ADDED : மே 10, 2024 05:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : 'எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ வழக்கில், சிறப்பு புலனாய்வு குழுவை, சுதந்திரமாக விசாரணை நடத்த விடவில்லை' என்று, காங்கிரஸ் அரசு மீது, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம், குமாரசாமி தலைமையிலான ம.ஜ.த., தலைவர்கள் புகார் அளித்தனர். மேலும், வழக்கை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்கவும் கோரிக்கை வைத்தனர்.

பெங்களூரு ராஜ்பவனில் கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை, குமாரசாமி தலைமையில் ம.ஜ.த., தலைவர்கள் நேற்று சந்தித்தனர். எம்.பி., பிரஜ்வல் ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக, அரசு மீது குற்றச்சாட்டு கூறி, புகார் அளித்தனர். அந்த புகாரில் கூறப்பட்டு இருப்பதாவது:

அரசுக்கு வரவேற்பு


ஹாசன் எம்.பி., பிரஜ்வல் தொடர்பான ஆபாச வீடியோக்கள் கடந்த மாதம் 21ம் தேதி, சமூக வலைதளங்களில் வெளியானது. ஆபாச வீடியோக்கள் ஹாசனில் மட்டும் வெளியாகவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் போட்டியிட்ட, சில தொகுதிகளிலும் வெளியாகி இருக்கிறது.

ஆபாச வீடியோக்கள் வெளியானது பற்றி, கர்நாடக மகளிர் ஆணையம் கடந்த மாதம் 25ம் தேதி, மாநில அரசுக்கு கடிதம் எழுதியது. அந்த கடிதத்தின்படி சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு, அரசு உத்தரவிட்டது. அரசின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம்.

எம்.பி., பிரஜ்வல் மீது பாலியல் புகார் எழுந்ததால், அவரை எங்கள் கட்சியில் இருந்து 'சஸ்பெண்ட்' செய்தோம். இந்த வழக்கு குறித்து, சிறப்பு புலனாய்வு குழுவால், சுதந்திரமாக விசாரணை நடத்த முடியவில்லை. சிறப்பு புலனாய்வு குழுவை, கர்நாடக அரசு கட்டுப்படுத்தி வருகிறது. துணை முதல்வர் சிவகுமாரின் உத்தரவின்படி, வீடியோக்கள் வெளியிடப்பட்டு உள்ளது.

வெற்று புகழ்ச்சி


பா.ஜ., பிரமுகர் தேவராஜ் கவுடா, கடந்த 6ம் தேதி பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி, ஆபாச வீடியோக்கள் வெளியானது பற்றி தகவல் வெளியிட்டு உள்ளார். பிரஜ்வலின் முன்னாள் கார் டிரைவர் கார்த்திக் கவுடா பற்றியும் கூறி உள்ளார். கார்த்திக் கவுடாவை இந்த வழக்கில் இருந்து, தப்பிக்க வைக்க முயற்சி நடக்கிறது.

மாண்டியா முன்னாள் எம்.பி., சிவராமேகவுடா, துணை முதல்வர் சிவகுமார் பேசிய ஆடியோ உரையாடலும் வெளியாகி உள்ளது. ஆபாச வீடியோக்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வெளியாகின்றன.

ஆபாச வீடியோக்கள் வெளியாகும் முன்பு, ஹாசன் காங்கிரஸ் பிரமுகர் நவீன்கவுடா முகநுால் பக்கத்தில், 'பிரஜ்வல் ஆபாச வீடியோ வெளியாக, இன்னும் சில மணி நேரமே உள்ளது' என்று பதிவிட்டு உள்ளார். காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் வெற்று புகழ்ச்சிக்காக போராட்டம் நடத்தி, இந்த வழக்கில் முன்னாள் பிரதமர் தேவகவுடா பெயரை இழுக்கின்றனர். இதனால் தேவகவுடா, குமாரசாமி பற்றி பேசவும் நீதிமன்றத்தில் இருந்து, தடை வாங்கியுள்ளோம்.

சிவகுமார் பின்னணி


முதல்வர், அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர்கள் இந்த வழக்கில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பெயரையும் இழுத்து விடுகின்றனர். இந்த வீடியோக்கள் பற்றி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, பிரதமர், உள்துறை அமைச்சருக்கு தெரியாது. தேர்தல் முடிந்ததும் பிரஜ்வல் வெளிநாடு சென்று விட்டார்.

அவரை தப்பிக்க வைத்தது, பிரதமரும், உள்துறை அமைச்சரும் தான் என்று கூறி, அரசியல்ரீதியாக பிரதமர், உள்துறை அமைச்சர் பெயருக்கு, களங்கம் ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர்.

மாநில அரசின் கீழ் வருவதால், சிறப்பு புலனாய்வு குழுவால், நேர்மையாக விசாரிக்க முடியாது. ஹாசனில் ஆபாச வீடியோக்கள் இருந்த 25,000 பென் டிரைவ்களை வினியோகம் செய்ததாக, துணை முதல்வர் சிவகுமார் மீது குற்றச்சாட்டு உள்ளது. ஆபாச வீடியோக்கள் வெளியாவதை தடுக்க, மாநில அரசு தவறி விட்டது. வீடியோ வெளியிட்டவர்களை கைது செய்ய, அரசு தவறி உள்ளது.

இதனால் இந்த வழக்கு விசாரணையை, சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்க, மாநில அரசுக்கு நீங்கள் பரிந்துரை செய்ய வேண்டும். துணை முதல்வர் சிவகுமாரை அமைச்சரவையில் இருந்து நீக்க, முதல்வர் சித்தராமையாவுக்கு, நீங்கள் கோரிக்கை வைக்க வேண்டும். இந்த வழக்கில் நீங்கள், உரிய நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நம்புகிறோம்.

இவ்வாறு புகாரில் கூறப்பட்டு இருந்தது.

ஹாசன் ஹொளேநரசிபுரா பா.ஜ., பிரமுகரும், வக்கீலுமான தேவராஜ்கவுடா சமீபத்தில் அளித்த பேட்டியில், ஆபாச வீடியோக்கள் வெளியானதில், துணை முதல்வர் சிவகுமாருக்கு தொடர்பு இருப்பதாக கூறினார்.

பகிரங்க விவாதத்திற்கு வரும்படி, சிவகுமாருக்கு சவாலும் விடுத்தார். சிறப்பு புலனாய்வு குழு மீதும், சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதையடுத்து, 'ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக, உங்களிடம் இருக்கும் ஆவணங்களுடன், விசாரணைக்கு ஆஜராக வேண்டும்' என்று, தேவராஜ் கவுடாவுக்கு சிறப்பு புலனாய்வு குழு சம்மன் அனுப்பி உள்ளது.

தேசிய மகளிர் ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், பிரஜ்வல் மீது பொய் புகார் அளிக்கும்படி, போலீஸ் பெயரில் சாதாரண சீருடையில் வந்து, எங்களை மிரட்டினர் என்று, சில பெண்கள் எங்களுக்கு புகார் அளித்து உள்ளனர்.

பிரஜ்வலால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்கள், யாரும் இதுவரை எங்களிடம் புகார் தெரிவிக்கவில்லை. பெண்களுக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக, மாநில டி.ஜி.பி.,க்கு கடிதம் எழுதி உள்ளோம். மூன்று நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி கேட்டுள்ளோம் என்று கூறப்பட்டு உள்ளது.

பிரஜ்வல் வீடியோ வெளியான வழக்கில், முன்னாள் கார் டிரைவர் கார்த்திக் கவுடா, காங்கிரஸ் பிரமுகர் நவீன்கவுடா, புட்டராஜ், சரத், சேத்தன் ஆகிய, ஐந்து பேரின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனால் அவர்கள் எந்த நேரத்திலும், கைதாக வாய்ப்பு உள்ளது. அவர்களை ஹாசன் சைபர் கிரைம் போலீசார் தேடுகின்றனர்.

ஆபாச வீடியோ வழக்கில் சிக்கி உள்ள, எம்.பி., பிரஜ்வலின் இருப்பிடம் பற்றி அறிய, 'இன்டர்போல்' 196 நாடுகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஆனாலும் அவர் எங்கு உள்ளார் என்று, இன்னும் தெரியவில்லை. அவரை பற்றி விமான நிலையங்கள், துறைமுகங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது. பிரஜ்வலை தேடி சிறப்பு விசாரணை குழுவினர், ஜெர்மனி சென்று இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஜெர்மனி சென்ற குழு?








      Dinamalar
      Follow us