UPDATED : ஆக 07, 2025 12:39 PM
ADDED : ஆக 07, 2025 12:25 AM

ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்தை வழங்கக்கோரி பார்லி., கூட்டத்தொடரில் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. அதைஆதரிக்கும்படி பார்லி.,யில் அதிக உறுப்பினர்கள் அடங்கிய கட்சிகளின் தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளேன். மாநில அந்தஸ்துக்காக, நீண்டகாலமாக ஜம்மு - காஷ்மீர் மக்கள் காத்திருக்கின்றனர்.
ஒமர் அப்துல்லா ஜம்மு - காஷ்மீர் முதல்வர், தேசிய மாநாட்டு கட்சி
விவாதம் தேவை!
பீஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீ விர திருத்தப் பணி குறித்து பார்லி., யில் விவாதிக்க வேண்டும் என, 'இண்டி' கூட்டணி வலியுறுத்துகிறது. அனைத்து வாக்காளர்களின் ஓட்டுரிமையை பாதுகாப்பது அவசியம். இந்நடவடிக்கையால் சிறுபான்மையினர், தலித்துகள், பழங்குடியினர் ஓட்டுரிமையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மல்லிகார்ஜுன கார்கே தேசிய தலைவர், காங்கிரஸ்
கொல்ல முயற்சி!
நான் குண்டு துளைக்காத காரில் பயணித்தாலும், என் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. என் கார் முழுதும் சேதமடைந்தது; என்னை கொல்ல முயற்சி நடந்தது. மாநில அமைச்சர் உதயன் குஹா தலைமையில் நடந்த இத்தாக்குதலை, போலீஸ் முன் அரங்கேற்றினர். ரோஹிங்கியா மற்றும் வங்கதேச முஸ்லிம்களை வைத்து என்னை தாக்கினர் .
சுவேந்து அதிகாரி மே. வங்க சட்டசபை எதிர்க்கட்சி தலைவர், பா.ஜ.,