ADDED : பிப் 01, 2024 11:16 PM

தங்கவயல்: ஏரியில் மண் அள்ளப்படுவதால் ஏற்பட்ட பள்ளத்தில் பசு விழுந்தது.
தங்கவயலின் கெம்பாபுரா கிராமத்தில், கால்நடை வளர்ப்பு, விவசாயம் செய்வோர் அதிகம் உள்ளனர். கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவர். அப்பகுதியில் உள்ள ஏரியில் தண்ணீர் இருப்பதால் கால்நடைகள் பருகுவதும் வழக்கம். இந்த ஏரியில் சட்டவிரோதமாக மண் அள்ளப்படுகிறது. இதனால், ஏரியில் ஆங்காங்கே பள்ளங்கள் காணப்படுகின்றன.
நேற்று காலை பசு ஒன்று ஏரியில் நீர் பருக சென்றது. எதிர்பாராமல் அங்குள்ள பள்ளத்தில் சேற்றில் விழுந்தது. இதனால், பசு தத்தளித்து. இதை கவனித்த கிராம இளைஞர்கள் 20 பேர், பசுவை கயிறு கம்புகள் பயன்படுத்தி மீட்டனர்.
கெம்பாபுரா கிராமத்தின் நாராயணா என்பவர் கூறுகையில், ''ஏரியில் ஆங்காங்கே மண் அள்ளப்படுவதால், எங்கு எவ்வளவு ஆழம் இருக்கிறது என்பதே தெரியவில்லை. சில இடங்களில் ஓரிரு அடி அளவில் தான் தண்ணீர் இருக்கும். அதனை கால்நடைகள் பயன்படுத்திக் கொள்ளும்.
''சேறும், சகதியுமாக ஏரி இருப்பதால், கிராம மக்கள் யாரும் செல்வதில்லை. பசு சிக்கிய சம்பவம் பலருக்கும் எச்சரிக்கையாக உள்ளது. சிறுவர்கள், முதியோர் ஏரிக்குள் செல்ல வேண்டாம்,'' என்றார்.
பசுவின் உரிமையாளர் அபுபக்கர், இளைஞர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
ஏரியில் தண்ணீர் குடிக்க சென்ற பசு எழ முடியாமல் சேற்றில் சிக்கியதை, கிராம இளைஞர்கள் காப்பாற்றினர். இடம்: கெம்பாபுரா ஏரி, தங்கவயல்.

