ADDED : செப் 26, 2024 06:26 AM
உத்தரகன்னடா: உத்தரகன்னடா, தான்டேலியின், அம்பிகா நகரில் வசிப்பவர் பாத்திமா, 50.
இவர் நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு, காளான் கொண்டு வர, வனப்பகுதிக்குச் சென்றிருந்தார். வழி மாறிச் சென்றதில், அவர் வீடு திரும்பவில்லை.
நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், பீதியடைந்த குடும்பத்தினர், அவரைத் தேடத் துவங்கினர்.
கண்டுபிடிக்க முடியாததால், அம்பிகாநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். உடனடியாக அங்கு வந்த போலீசார், வனத்துறையினர், உள்ளூர் மக்களின் உதவியுடன், வனத்தில் பாத்திமாவை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
குளகி சாலையோர வனப்பகுதியில், இரவு 10:30 மணிக்கு அவரை கண்டுபிடித்து, அம்பிகா நகருக்கு அழைத்து வந்து, குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
அவரை கண்டுபிடித்திருக்கா விட்டால், வன விலங்குகளால் அபாயம் ஏற்பட்டிருக்கும்.
போலீசார், வனத்துறையினர் உடனடி நடவடிக்கை எடுத்ததால், அவர் உயிர் பிழைத்தார்.

