ADDED : ஜன 18, 2024 05:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்தரகன்னடா: ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது, படகு உடைந்து நீரில் மூழ்க துவங்கியது. இதில் இருந்த ஏழு மீனவர்களும் மீட்கப்பட்டனர்.
தட்சிண கன்னடா, மங்களூரில் இருந்து, ஏழு மீனவர்கள் நான்கு நாட்களுக்கு முன்பு, ஆழ்கடலில் மீன் பிடிக்க 'ராயல் ப்ளூ' என்ற படகில் புறப்பட்டனர். உத்தரகன்னடா, கார்வார் மற்றும் கோவா எல்லையில் உள்ள, பைதோல் அருகில் நேற்று அதிகாலை சென்றபோது, காற்றின் வேகத்தை தாங்காமல் படகின் அடிப்பகுதி உடைந்தது. கடல்நீர் புகத்துவங்கியது.
மீனவர்கள் நீரை வெளியேற்றியும் முடியவில்லை. படகு மூழ்கும் அபாயம் ஏற்பட்டது. சிக்கியது. மீனவர்கள் உடனடியாக கடலோர காவல் படைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பின் இரண்டு படகுகளில் சென்ற கடலோர காவல் படையினர், மற்ற மீனவர்களின் உதவியுடன், படகில் சிக்கியிருந்த மீனவர்களை காப்பாற்றினர்.