ADDED : மார் 07, 2024 01:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவனந்தபுரம்:கேரள மாநிலம் பத்தனந்திட்டா மாவட்டம் அடூரைச் சேர்ந்தவர் எலிசபெத் பாபு, 58. இரண்டு நாட்களுக்கு முன், மாலையில் வீட்டின் பின்பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென அங்கு வந்த காட்டுப்பன்றியிடமிருந்து தப்பிக்க எலிசபெத் ஓடினார். அப்போது, அங்கிருந்த கிணற்றில் எலிசபெத் தவறி விழுந்தார். அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதற்கிடையே, நேற்று முன்தினம் வீட்டின் பின்பகுதியில் இருந்து யாரோ அழைக்கும் சத்தம் கேட்டு கிணற்றுக்குள் பார்த்த போது, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த எலிசபெத் உதவிக்கு அழைத்தபடி இருந்தார்.
பின், தீயணைப்பு துறையினர், நீண்ட நேரம் போராடி, அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

