'முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அரசியலமைப்புக்கு எதிரானது'
'முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அரசியலமைப்புக்கு எதிரானது'
ADDED : மார் 18, 2025 05:11 AM

“முஸ்லிம்களுக்கு அரசு டெண்டர்களில் 4 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவது அரசியலமைப்புக்கு எதிரானது,” என, பா.ஜ., -எம்.பி., தேஜஸ்வி சூர்யா கூறியுள்ளார்.
புதுடில்லியில் உள்ள பா.ஜ., அலுவலகத்தில் பெங்களூரு தெற்கு தொகுதி பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா அளித்த பேட்டி:
முஸ்லிம்களுக்கு அரசு டெண்டர்களில் 4 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது.
ஒரு சாராரை திருப்திப்படுத்தும் அரசியலாக உள்ளது. இவை அனைத்தும் ராகுலின் உத்தரவின் பேரில் நடக்கிறது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பா.ஜ., போராட்டம் நடத்தும். சட்டசபை மட்டுமின்றி வீதிகளிலும் போராடுவோம். லோக்சபா, ராஜ்யசபாவிலும் பிரச்னை குறித்து பேசுவோம். நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் தயாராக உள்ளோம்.
சித்தராமையா தலைமையிலான அரசு, தேசிய ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. இதை திரும்பப் பெறும் வரை, போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார - நமது நிருபர் -