ADDED : டிச 31, 2024 05:23 AM
தங்கவயல்: தங்கவயலில் புத்தாண்டு தினத்தை கொண்டாட போலீசார் கட்டுப்பாடும், எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். ''நள்ளிரவு 12:30 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி இல்லை,'' என்று தங்கவயல் போலீஸ் எஸ்.பி., சாந்தராஜு தெரிவித்து உள்ளார்.
அவரது அறிக்கை:
தங்கவயலில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சிறுவர்கள், முதியோர், பெண்களுக்கு யாரேனும் தொல்லை கொடுத்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை விதிக்கப்படும்.
புத்தாண்டு விழாவை முன்னிட்டு இரவு 12:30 மணிக்கு பொது இடங்களில் மது விருந்துக்கு அனுமதி கிடையாது. ஹோட்டல்கள், சொகுசு விடுதி, பண்ணைகளில் நள்ளிரவு மது விருந்துக்கு அனுமதி இல்லை.
நள்ளிரவு நேரத்தில் வாகனங்கள் இயக்கவும் 'வீலிங்' செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
புத்தாண்டு தினத்தன்று வழிபாட்டு தலங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்த கூடாது.
இவ்வாறு கூறியுள்ளார்.