தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ ஓய்வு பெற்ற நீதிபதிக்கு லண்டனில் பாதுகாப்பு

 ஓய்வு பெற்ற நீதிபதிக்கு லண்டனில் பாதுகாப்பு

 ஓய்வு பெற்ற நீதிபதிக்கு லண்டனில் பாதுகாப்பு


ADDED : ஜூன் 10, 2026 09:58 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 10, 2026 09:58 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: மும்பை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் கவுதம் படேல். இவர், ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள தன் மகள் வீட்டில் தற்போது வசித்து வருகிறார்.

இவர் கடந்த 2024ல் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த தாவூதி போரா சமூகத்தின் அடுத்த ஆன்மிக தலைவர் குறித்த தீர்ப்பு ஒன்றை வழங்கினார். இந்த வழக்கு தற்போது மேல்முறையீட்டில் உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக, லண்டனில் உள்ள ஒய்வு பெற்ற நீதிபதி கவுதம் படேல் மகளின் இல்லத்திற்கு தொடர்ந்து கொலை மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளது.

இந்நிலையில், பிரிட்டன் சுற்றுப்பயணத்தில் உள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்துக்கு இது குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர், இது தொடர்பாக லண்டனில் உள்ள பிரிட்டனுக்கான இந்திய தூதர் குமரனை நேரில் சந்தித்து பேசினார்.

இதையடுத்து பிரிட்டன் போலீஸ் உயரதிகாரி, முன்னாள் நீதிபதி கவுதம் படேல் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க நேற்று உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us