ADDED : டிச 05, 2024 07:29 AM

“ஹாசனில் மாநாடு நடத்துவதால், எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. அவர்கள் எதையாவது செய்து கொள்ளட்டும்,” என, ம.ஜ.த., முன்னாள் அமைச்சர் ரேவண்ணா தெரிவித்தார்.
இதுகுறித்து, டில்லியில் அவர் நேற்று அளித்த பேட்டி:
ஹாசனில் மாநாடு நடத்த காங்கிரசார் திட்டமிட்டுள்ளனர். இதனால் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. அவர்கள் எதையாவது செய்து கொள்ளட்டும். மாநாடு நடத்துவதால் எங்களுக்கு பாதிப்பில்லை. அதை பற்றி நான் கவலைப்படவில்லை. அது அவர்கள் கட்சி சம்பந்தப்பட்ட விஷயம். எங்களுக்கு தேவையற்றது.
கடந்த 50 ஆண்டுகளில், ஹாசனுக்கு காங்கிரசாரின் பங்களிப்பு என்ன? இப்போது காங்கிரசார் செய்யும் அனைத்துக்கும், 2028ல் பதிலளிப்போம். ஆறு முறை எம்.எல்.ஏ.,வான நான், இதுபோன்ற பல மாநாடுகளை கண்டுள்ளேன். ம.ஜ.த.,வை யாராலும் எதுவும் செய்ய முடியாது.
ம.ஜ.த.,வை காங்கிரசார், 'டார்கெட்' செய்கின்றனர். அதை பற்றி நாங்கள் அஞ்சவில்லை. 2018ல் என்ன நடந்தது என்பது, அனைவருக்கும் நினைவுள்ளது. 2028ல் அப்படியே நடக்கும். மீண்டும் எங்களிடம்தான் வர வேண்டும்.
வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக, மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்திப்பதற்காக, டில்லிக்கு வந்துள்ளேன். அவரை சந்தித்துப் பேசினேன்.
இவ்வாறு அவர் கூறினார்- நமது நிருபர் -.