பிரீமியர் லீக்: 5 விக்., வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி
பிரீமியர் லீக்: 5 விக்., வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி
UPDATED : ஏப் 14, 2025 11:34 PM
ADDED : ஏப் 14, 2025 09:44 PM

லக்னோ: பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் லக்னோ அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வீழ்த்தி வெற்றிபெற்றது.
பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 30வது போட்டியில் உ.பி.,மாநிலம் லக்னோவில் உள்ள வாஜ்பாய் எகானா மைதானத்தில் நடைபெற்ற சென்னை, லக்னோ அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங் தேர்வு செய்தது.
தொடர்ந்து 5 போட்டிகளில் தோற்ற சென்னை அணி இன்றைய போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்தால் , வெற்றிப்பாதைக்கு திரும்பலாம்.
இன்றைய போட்டியில் பேட்டிங் செய்ய களம் இறங்கிய லக்னோ அணியில் அதிகபட்சமாக ரிஷப் பாண்ட் 63 ரன்களிலும் , மிட்சல் மார்ச் 30 ரன்களிலும், ஆயுஷ் பதானி 22 ரன்களிலும், அப்துல் சமத் 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்த லக்னோ அணி 166 ரன்கள் எடுத்தது. சென்னை அணியில் ரவீந்திர ஜடேஜா, மதீஷா பதிரானா தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
167 ரன்கள் வெற்றி இலக்குடன் களம் இறங்கிய சென்னை அணியில் ஷேக் ரஷீத், 27 ரன்களிலும், ரச்சின் ரவீந்திரா 37 ரன்களிலும், ராகுல் திரிபதி 9 ரன்களிலும் , ரவீந்திர ஜடேஜா 7 ரன்களிலும், விஜய சங்கர் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து சிவம் துபே 43 ரன்களிலும், தோனி 26 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இறுதியில் சென்னை அணி 19.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தியது.