தேடப்பட்ட ஐ.எஸ் பயங்கரவாதி டில்லியில் கைது: ரூ.3 லட்சம் வெகுமதி அறிவித்த நிலையில் சிக்கினான்
தேடப்பட்ட ஐ.எஸ் பயங்கரவாதி டில்லியில் கைது: ரூ.3 லட்சம் வெகுமதி அறிவித்த நிலையில் சிக்கினான்
ADDED : ஆக 09, 2024 11:48 AM

புதுடில்லி: பல ஆண்டுகளாக தேடப்பட்டு, ரூ.3 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்ட ஐ.எஸ் பயங்கரவாதி ரிஸ்வான் அப்துலை டில்லியில் என்ஐஏ கைது செய்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக புனேவில் இருந்து சதித்திட்டம் தீட்டிய ஐஎஸ் பயங்கரவாதிகள் ஏழு பேரை என்.ஐ.ஏ கைது செய்தது. அவர்களிடம் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அப்போது ரிஸ்வான் அப்துல் உள்ளிட்ட 2 பேர் தப்பியோடினர். அவர்களை சில ஆண்டுகளாக தேடி வந்தும் கிடைக்கவில்லை.
தப்பியோடிய பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் ஏற்படும் என்ற அபாயம் இருந்த நிலையில், ரிஸ்வானை பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.3 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என என்.ஐ.ஏ அறிவித்தது. தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட என்ஐஏ, டில்லியில் உள்ள தர்யாகஞ்ச் பகுதியில் ரிஸ்வானை கைது செய்தனர். அவருடன் தொடர்புடையவர்கள் பற்றிய விவரங்களை விசாரித்து வருகின்றனர்.