ADDED : நவ 23, 2024 10:57 PM
பெங்களூரு: ஹெப்பால் மற்றும் ஹென்னுார் இடையே உள்ள, மழைநீர்க்கால்வாய்கள் அருகில் உள்ள காலி இடங்களில், 7.5 கி.மீ., நீளத்திற்கு சாலை அமைக்க, பெங்களூரு மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
பெங்களூரின் ஹெப்பால் மற்றும் ஹென்னுார் இடையே மழைநீர்க்கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் அருகில் உள்ள காலி இடங்களில், 7.5 கி.மீ., நீளத்திற்கு சாலை அமைக்க, திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதிகளில் நிலத்தை கையகப்படுத்தி, நிவாரணம் வழங்கப்படும். சாலை அமைக்க கையகப்படுத்த வேண்டிய, 120 சொத்துகள் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் நிலத்தை கையகப்படுத்த அறிவிப்பு வெளியிடப்படும்.
மழைநீர் பாயும் சாக்கடைகளின் 50 மீட்டர் எல்லையில், எந்த வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள அனுமதி இல்லை. எனவே காலியிடத்தில் பணிகளை தடத்த, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
முதல் கட்டத்தில் ஹெப்பால், ஹென்னுார் இடையிலான சாலையில் மேம்பாட்டுப் பணிகள் நடக்கும். சாலையின் உயரம் ஓரளவு உயர்த்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.