கேரள கல்லுாரியில் 'ராகிங்' 7 மாணவர்கள் மீது வழக்கு
கேரள கல்லுாரியில் 'ராகிங்' 7 மாணவர்கள் மீது வழக்கு
ADDED : பிப் 19, 2025 01:12 AM
திருவனந்தபுரம்:கேரள மாநில கல்லுாரிகளில் சமீபமாக ராகிங் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
கோட்டயம் அரசு நர்சிங் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவரின் உடலை காம்பசால் கீறி ராகிங் செய்த சம்பவமும், வயநாடு மாவட்டத்தில், அரசு கால்நடை மருத்துவக் கல்லுாரியில் படித்த சித்தார்த்தன் என்ற மாணவன் ராகிங் கொடுமையால் தற்கொலை செய்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், திருவனந்தபுரம், காரிய வட்டத்தில் உள்ள அரசு கல்லுாரியில் பி.எஸ்சி., முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர் ஒருவர், கழக்கூட்டம் போலீசில் கொடுத்த புகாரில், 'என்னை சில மாணவர்கள் தினமும் கை, கால்களை கட்டிப்போட்டு அடித்தும், முட்டி போட்டு நிற்க வைத்தும் கொடுமைப்படுத்துகின்றனர்.
'குடிக்க தண்ணீர் கேட்ட போது, எச்சில் துப்பி குடிக்க வைத்தனர்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில், போலீசார், மூன்றாம் ஆண்டு மாணவர்கள் அலன், அனந்தன், வேலு, சலமான், சிராவன், இமானுவேல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர் பார்த்தன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.