ADDED : மார் 01, 2024 06:28 AM
தங்கவயல்: தங்கவயலில் உள்ள நகராட்சி பகுதிகளில், தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா தலைமையில் கர்நாடக அரசின் ஐந்து வாக்குறுதி திட்டங்கள் மக்களுக்கு நேரடியாக கிடைத்ததா என விசாரிப்பது; மக்கள் குறைகேட்பு ஆகியவை இன்று முதல் 6 ம் தேதி வரை நடக்கிறது. 4ம் தேதி மட்டும் நிகழ்ச்சி நடக்காது.
இன்று: 18வது வார்டு கென்னடிஸ், 19 வது வார்டு சாமிநாத புரம், 20 வது வார்டு ஸ்ரீராம் நகர், 21வது வார்டு சோமேஸ்வரர் பிளாக் பகுதிகளுக்கு சோமேஸ்வரர் பிளாக் வாட்டர் டாங்க் அருகிலும்; 22வது வார்டு சொர்ணா நகர், 23வது வார்டு மசூதி, 23 வது வார்டு கீதா ஆகிய பகுதிகளுக்கு வெங்கடேச பெருமாள் கோவில் வளாகத்தில் நடக்கிறது.
நாளை: 27வது வார்டு கிங் ஜார்ஜ், 28வது வார்டு பால்கார், 29வது வார்டு கணேஷ்புரம் ஆகிய பகுதிகளுக்கு கிங் ஜார்ஜ் அரங்கிலும்; 30 வது வார்டு மஸ்கம், 31 வது வார்டு காந்தி, 32 வது வார்டு பாரதிபுரம் ஆகிய பகுதிகளுக்கு சூசைப்பாளையம் தேவாலயம் அருகிலும் நடக்கிறது.
மார்ச் 3ம் தேதி: 16வது வார்டு ஈ.டி.பிளாக், 17 வது வார்டு என்.டி.பிளாக், 25 வது வார்டு ஜெயின், 26 வது வார்டு அம்பேத்கர் நகர் ஆகிய பகுதிகளுக்கு மலையாளி மைதானத்திலும்; 12வது வார்டு செயின்ட் மேரிஸ், 13வது வார்டு ஆஸ்பிடல், 14வது வார்டு ஆல்பர்ட் ஸ்கொயர், 15வது வார்டு எஸ்.டி.பிளாக் ஆகிய பகுதிகளுக்கு சாம்பியன் ஹைகிரவுண்ட் மைதானத்திலும் நடக்கிறது.
மார்ச் 5ம் தேதி: 33வது வார்டு ஆண்டர்சன்பேட்டை, 34வது வார்டு பஜார் தெரு, 35 வது வார்டு பண்டார், 8வது வார்டு கில்பர்ட்ஸ் ஆகிய பகுதிகளுக்கு நம்பெருமாள் பள்ளியிலும்; 1வது வார்டு பெமல் ஆபிசர்கள் குவார்ட்டர்ஸ், 2வது வார்டு பெமல் தொழிலாளர் குவார்ட்டர்ஸ், 6வது வார்டு ஹென்றீஸ், 7வது வார்டு புல்லன்ஸ் ஆகிய வார்டுகளுக்கு ஹென்றீஸ் நாடக அரங்கிலும் நடக்கிறது.
மார்ச் 6ம் தேதி: 3வது வார்டு பாலகாடு, 4வது வார்டு டாங்க், 5வது வார்டு ஓரியண்டல் ஆகிய பகுதிகளுக்கு என்.டி.எம்., பள்ளி திடலிலும்; 9-வது வார்டு செல்லப்பா, 10வது வார்டு சின்னக்கண்ணு, 11வது வார்டு ரிவிட்டர்ஸ் ஆகிய பகுதிகளுக்கு மாரிகுப்பம் அம்பேத்கர் கல்யாண மண்டபத்திலும் நடக்கிறது.

