ADDED : ஜூலை 15, 2025 10:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:மத்திய டில்லி துர்க்மேன் கேட்டில், வீட்டுக்குள் அழுகிய நிலையில் கிடந்த, 46 வயது ஆண் உடல் மீட்கப்பட்டது.
துர்க்மேன் கேட் அருகே சட்டா மோம்கிராமில் உள்ள ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக தகவல் கிடைத்தது.
போலீசார் விரைந்து சென்றனர். முஹமது இம்ரான் கான்,46, என்பவர் வசித்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். வீட்டுக்குள் முஹமது இம்ரான் கான், உடல் அழுகிய நிலையில் படுக்கையில் கிடந்தது.
உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வீடு முழுதும் ஆய்வு செய்தனர். முஹமது இம்ரான் கான் தனியாக வசித்து வந்துள்ளார். உடற்கூறு ஆய்வுக்குப் பின், மரணத்துக்கான காரணம் தெரிய வரும் என போலீசார் கூறினர். அவரது குடும்பத்தினர் குறித்து விசாரணை நடக்கிறது.