பஹல்காமினை பயங்கரவாதிகள் தேர்வு செய்தது ஏன்; பாதுகாப்பு படையினர் ஆய்வில் தகவல்
பஹல்காமினை பயங்கரவாதிகள் தேர்வு செய்தது ஏன்; பாதுகாப்பு படையினர் ஆய்வில் தகவல்
UPDATED : ஏப் 24, 2025 11:03 AM
ADDED : ஏப் 24, 2025 07:44 AM

ஸ்ரீநகர்: கரடுமுரடான நிலப்பரப்பு, மலையேற்றத்தின் பெரும் பகுதியில் வாகனம் ஓட்ட முடியாது. இதற்காக தான் தாக்குதல் நடத்த பஹல்காமினை பயங்கரவாதிகள் தேர்வு செய்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
பஹல்காமின் பைசரனில் அழகிய காட்சிகளை ரசித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த இடத்தை பயங்கரவாத தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் தேர்வு செய்தது காரணம் என்ன என்பது குறித்து விபரம் பின்வருமாறு:
* பசுமை சூழலை பராமரிப்பதால் அங்கு 5 கி.மீ.,க்கு வண்டிகள் செல்ல அனுமதியில்லை. நடந்தோ அல்லது குதிரை மூலமாகவோ தான் அங்கு செல்ல முடியும்.
* தாக்குதல் நடத்தப்பட்டால் எதிர்த்தாக்குதல் நடத்த தாமதம் ஏற்படும். அந்த பள்ளத்தாக்கில் எளிதாக ஊடுருவி தாக்குதல் நடத்திவிட்டு தப்பிக்க முடியும்.
* கரடுமுரடான நிலப்பரப்பு, மலையேற்றத்தின் பெரும் பகுதியில் வாகனம் ஓட்ட முடியாது
சில பகுதிகள் மிகவும் வழுக்கும் தன்மை கொண்டவை.
* பைசரனில் கடைகள் நடத்தும் உள்ளூர்வாசிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். பாதுகாப்புப் படையினர் பிரபலமான பைசரன் மலைப்பகுதியை அடைய குறைந்தபட்சம் 30-40 நிமிடங்கள் ஆகும்.
* சிரமங்கள் இருந்தபோதிலும், 30 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள பைசரனுக்கு தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.
* பயங்கரவாதிகள் அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதிகளில் மறைவிடங்களை அமைத்து, பதுங்கி இருந்து சுற்றுலா பயணிகள் மீது கொடிய தாக்குதல்களை நடத்தி உள்ளனர்.