பஞ்சாபில் ரவுடி கும்பல் கைது: பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டது அம்பலம்
பஞ்சாபில் ரவுடி கும்பல் கைது: பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டது அம்பலம்
ADDED : நவ 26, 2025 09:14 PM

சண்டிகர்: பஞ்சாபில், பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல், பஞ்சாபில் பல அட்டூழியங்களை செய்துவருகிறது. அக்கும்பலைச் சேர்ந்த 4 ர் தேரா பசாய் - அம்பாலா நெடுஞ்சாலையில் உள்ள வீட்டில் பதுங்கி உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அங்கு சென்று அவர்களை பிடிக்க முயன்றனர். அப்போது அக்கும்பல் போலீசாரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். போலீசாரும் அக்கும்பல் மீது துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். விசாரணையில் அவர்கள் ஹர்விந்தர் சிங், லக்விந்தர் சிங், முகமது சமீர் மற்றும் ரோகித் சர்மா தெரியவந்தது. அவர்களிடம் இருந்து பிஸ்டல்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் வெளிநாட்டில் பதுங்கியுள்ள ரவுடி கோல்டி பிரார் உத்தரவுப்படி சண்டிகர், மொகாலி, சண்டிகர் மற்றும் பஞ்சகுலா பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டது தெரியவந்துள்ளது.

