ADDED : ஏப் 23, 2025 03:40 AM

மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி வாயிலாக 2014 முதல், இதுவரை 38.89 லட்சம் கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதை அவர்கள் மாநிலங்களுடன் பகிரவில்லை. சமீபத்தில் கலால் வரியை லிட்டருக்கு, 2 ரூபாய் உயர்த்தியதன் வாயிலாக மட்டும் 28,000 கோடி ரூபாய் வருவாய் மத்திய அரசுக்கு கிடைக்கவுள்ளது.
மல்லிகார்ஜுன கார்கே
தலைவர், காங்கிரஸ்
ராகுலின் திசைதிருப்பல்!
தேர்தல் கமிஷன் சமரசத்துக்கு ஆளாகியுள்ளதாக ராகுல் பேசியுள்ளார். ஆனால், தன் மீது நேஷனல் ஹெரால்டு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது குறித்து அவர் வாய் திறக்கவில்லை. தன் மீதான ஊழல் வழக்கை திசைதிருப்பவே, ராகுல் தேர்தல் கமிஷன் குறித்து பேசுகிறார்.
நலின் கோஹ்லி
செய்தித்தொடர்பாளர், பா.ஜ.,
10 மருத்துவ கல்லுாரிகள்!
நாட்டிலுள்ள பணியாளர்களுக்கு சிறந்த சுகாதார சேவை வழங்க வேண்டும் என்பது அரசின் தொலைநோக்கு கொள்கை. அதன்படி தொழிலாளர் காப்பீட்டு கழகமான இ.எஸ்.ஐ.சி., நாடு முழுதும் புதிதாக 10 இ.எஸ்.ஐ., மருத்துவமனைகள் துவங்க ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் மருத்துவ கல்வி இடங்களும் அதிகரிக்கும்.
மன்சுக் மாண்டவியா
மத்திய அமைச்சர், பா.ஜ.,

