ADDED : பிப் 26, 2025 07:53 PM
லஹோரி: போலி முதலீடு திட்டத்தில் ஒருவரிடம் இருந்து 1 கோடி ரூபாய் மோசடி செய்த நபரை, ஆறு ஆண்டுகளுக்குப் பின் போலீசார் கைது செய்தனர்.
லஹோரி கேட் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் சுனில் ஜுனேஜா முகமது ஆஷ்ரப். இவருக்கு ஹரியானாவின் கர்னாலைச் சேர்ந்த தருண் குமார், 29, என்பவர் அறிமுகமானார்.
காப்பீடு நிறுவனத்தில் வேலை செய்த தருண், சுனில் ஜுனேஜாவிடம் 1 கோடி முதலீடு செய்தால், 1.25 கோடி ரூபாய் கிடைக்கும். அதாவது 25 லட்சம் லாபம் கிடைக்குமென ஆசை வார்த்தை கூறினார்.
அதை நம்பி, தருண், அவரது நண்பர் அஜித்திடம் 1 கோடி ரூபாய் சுனில் கொடுத்துள்ளார். அதன் பின் இருவரையும் சுனிலால் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுனில், போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து, அஜித்தை கைது செய்தனர். தருண் குமாரை பிடிக்க முடியாமல் இருந்தது. அவர் தன் வேலையையும் இருக்கும் இடத்தையும் அடிக்கடி மாற்றி வந்தார்.
தொடர் கண்காணிப்புகளால் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு சில தினங்களுக்கு முன்பு தருண்குமாரை போலீசார் கைது செய்தனர்.