sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ரூ.1,000 கோடியில் குப்பை நிர்வகிப்பு 2 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு குரங்கு தாக்குதலை தடுக்க தி்ட்டம்

/

ரூ.1,000 கோடியில் குப்பை நிர்வகிப்பு 2 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு குரங்கு தாக்குதலை தடுக்க தி்ட்டம்

ரூ.1,000 கோடியில் குப்பை நிர்வகிப்பு 2 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு குரங்கு தாக்குதலை தடுக்க தி்ட்டம்

ரூ.1,000 கோடியில் குப்பை நிர்வகிப்பு 2 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு குரங்கு தாக்குதலை தடுக்க தி்ட்டம்


ADDED : பிப் 29, 2024 11:08 PM

Google News

ADDED : பிப் 29, 2024 11:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

l குப்பை நிர்வகிக்கும் பொறுப்பு ஒரு ஏஜென்டிடம் ஒப்படைக்கப்படும். அடுத்த 25 - 30 ஆண்டுகளை கருத்தில் கொண்டு, குப்பை போடுவதற்காக, நகரின் நான்கு திசைகளிலும், 50 - 100 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்படும். நிலம் வாங்குவதற்கு, 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு

l பாரம்பரிய கழிவுகள் கொட்டுவதற்கு, மண்டல வாரியாக ஒரு நிர்வகிப்பு மையம் அமைக்கப்படும்

l ஏற்கனவே உள்ள 160 பொதுக் கழிப்பறைகள் மேம்படுத்தப்படும். புதிதாக 204 பொதுக் கழிப்பறைகள் அமைக்கப்படும். மகளிருக்கு முன்னுரிமை வழங்கி, 100 கழிப்பறைகள் அமைக்கப்படும். துப்புரவுத் தொழிலாளர்கள் ஓய்வு பெறுவதற்காக, 50 இடங்களில் நிரந்தர ஓய்வறைகள் அமைக்கப்படும். இதற்கு, 10 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது

l குப்பை நிர்வகிப்பு, தரம் பிரிப்பு, திடக்கழிவு மையங்கள் நிர்வகிப்பு பணிகளுக்காக, பெங்களூரு குப்பை நிர்வகிப்பு நிறுவனத்துக்கு, 1,000 கோடி ரூபாய் வழங்கப்படும்

l பேகூர் ரமணஸ்ரீ லே - அவுட்டில், சோதனை முறையில் ஒருங்கிணைந்த குப்பை நிர்வகிப்பு முறை அமல்படுத்தப்படும். இதன் மூலம், குறிப்பிட்ட 250 வீடுகளின் குப்பையை பெற்று, மறுசுழற்சி செய்வது நோக்கமாகும்

l துாய்மை பணியில் சிறப்பாக பணிபுரியும், எட்டு மண்டலத்தின் தலா ஒரு துப்புரவு தொழிலாளரை அடையாளம் கண்டு, 50,000 ரூபாய் சிறப்பு ஊக்கத்தொகையுடன், 'சரணே சத்தியக்கா' என்ற பெயரில் விருது வழங்கப்படும்.

l வானிலை மாற்றத்தை கண்காணிப்பு மையத்தை, 10 கோடி ரூபாயில் அமைக்கப்படும்

l மாநகராட்சி வாயிலாக, 2024 ஜூன் 5க்குள், 'டெக்தான்' எனும் தொழில்நுட்ப மாநாடு நடத்தி, காலநிலை நிலைத்தன்மைக்கான தீர்வுகளை கண்டுபிடிக்க புதிய நிறுவனங்கள் துவக்க ஊக்குவிக்கப்படும்

l வனம், தோட்டக்கலை, ஏரிகள் பிரவை, நடப்பாண்டு முதல், வனம், வானிலை மாற்றம் மேலாண்மை பிரிவு என்று பெயர் மாற்றம் செய்யப்படும்

l சாலை ஓரம், பூங்கா, ஏரிக்கரை, காலி இடங்களில் 2 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தாசரஹள்ளி, எலஹங்காவில் அதிநவீன மரக்கன்று மையம் அமைக்கப்படும். இதற்காக, 14 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்

l மக்கள் குடியிருப்பு பகுதிகளில், பாம்புகள், குரங்குகள் தாக்குதலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். காயமடையும் வன விலங்குகள் பராமரிக்க பன்னரகட்டா மிருகக் காட்சி சாலையில், 1 கோடி ரூபாய் செலவில் பராமரிப்பு மையம் அமைக்கப்படும்

l பூங்காக்கள் மேம்படுத்த, 35 கோடி ரூபாய்; ஏரிக்கரைகளில் கழிப்பறைகள், பாதுகாப்பு அறைகள் கட்டுவதற்கு, 35 கோடி ரூபாய் ஒதுக்கீடு

l மரக்கன்றுகள், ஏரிகள், பூங்காக்கள் நிர்வகிக்க மொபைல் செயலிகள் பயன்படுத்தப்படுகின்றன

l இந்தாண்டு முதல், நகரின் அனைத்து பூங்காக்களிலும் மழை நீர் சேகரிப்பு மையங்கள் அமைக்கப்படும்

l 50 போர்வெல்களை, தலா 5 லட்சம் ரூபாயிலும்; 10 குளங்களையும் தலா 20 லட்சம் ரூபாயிலும் மேம்படுத்தப்படும். இதற்காக, 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு

l வானிலை மாற்றம், இயற்கை பேரிடர் சம்பவங்களால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க, 10 கோடி ரூபாயில் முதல் கட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.






      Dinamalar
      Follow us