தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ ரூ.1,000 திட்டம் விரைவில் துவக்கம்

ரூ.1,000 திட்டம் விரைவில் துவக்கம்

ரூ.1,000 திட்டம் விரைவில் துவக்கம்


ADDED : நவ 29, 2024 10:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2024 10:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வடகிழக்கு டில்லி புராரியில் நடந்த ஆம் ஆத்மி தேர்தல் பிரசார பாதயாத்திரையில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:

கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்த 2024 - 20-25ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், 'முக்ய மந்திரி மகிளா சம்மன் யோஜனா' திட்டத்தில், 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்துக்கு 2,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் சேருவதற்கான பதிவு செய்யும் பணி மிக விரைவில் துவங்கும். இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பதாரர் டில்லி வாக்காளராக இருக்க வேண்டும்.

மத்தியில் ஆளும் பா.ஜ., 22 மாநிலங்களிலும் ஆட்சி நடத்துகிறது. ஆனால், அந்த மாநிலங்களில் இலவச மற்றும் தடையில்லா மின்சாரம், தரமான கல்வி வழங்கும் பள்ளிகள், மருத்துவ சேவைகளை வழங்கவில்லை.

அதேநேரத்தில், டில்லி மக்களுக்கு இலவச மின்சாரம், சர்வதேச தரத்தில் இலவசக் கல்வி, மருத்துவம் ஆகியவற்றை ஆம் ஆத்மி அரசு வழங்கி வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us