கார் ஷோ ரூமில் ரூ.102 கோடி கறுப்பு பணப்பரிமாற்றம்: நடிகர்கள், விளையாட்டு வீரர்களுக்கு தொடர்பு!
கார் ஷோ ரூமில் ரூ.102 கோடி கறுப்பு பணப்பரிமாற்றம்: நடிகர்கள், விளையாட்டு வீரர்களுக்கு தொடர்பு!
ADDED : ஜூலை 06, 2024 01:38 PM

கோழிக்கோடு: கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கார் ஷோரூமில் நடந்த வருமான வரி சோதனையில் ரூ.102 கோடி அளவுக்கு கறுப்பு பணப்பரிமாற்றம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில், சினிமா நடிகர்கள், விளையாட்டு வீரர்களுக்கும் தொடர்பு உள்ளதால், அவர்கள் வருமான வரித்துறையினர் கண்காணிப்புக்குள் வந்து உள்ளனர்.
கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த முஜீப் ரஹ்மான் என்பவர் ராயல் டிரைவ் என்ற பெயரில், கார் ஷோ ரூம் ஒன்றை நடத்தி வருகிறார். மலப்புரம், கோழிக்கோடு மற்றும் எர்ணாகுளம் நகரில் கிளைகள் உள்ளன. வருமான வரித்துறைக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இச்சோதனையில், அதில் ரூ.102 கோடி அளவுக்கு கறுப்பு பணப்பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சிலர் புதிதாக வாங்கிய சொகுசு கார்களை ஓரிரு ஆண்டுகள் பயன்படுத்திவிட்டு அதனை இங்கு விற்பனை செய்ததும். அதற்கு பதில், கணக்கில் காட்டாமல் கறுப்பு பணத்தை பெற்று கொண்டுள்ளனர். மேலும், இங்கு கார்களை வாங்கி கறுப்பு பணத்தை செலுத்தி உள்ளனர். இந்த விவகாரத்தில் சினிமா நடிகர்கள், விளையாட்டு வீரர்களுக்கு தொடர்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதனால், அவர்கள் பயத்தில் உள்ளனர்.