ADDED : அக் 14, 2025 04:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அகர்தலா : வடகிழக்கு மாநிலமான திரிபுராவின், கலாம்சவுரா மாவட்டம், மத்திய பாக்சாநகரைச் சேர்ந்தவர் அமல் உசேன்.
இவரது மனைவி லிபியாரா கதுன், 33. இவர்கள் வீட்டில், தடை செய்யப்பட்ட, 'யாபா' போதை மாத்திரைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போதைப்பொருள் தடுப்பு ப் பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, பி.எஸ்.எப்., எனப்படும் எல்லை பாதுகாப்புப் படையுடன் இணைந்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.
அப்போது வீட்டின் சமையலறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பொட்டலங்களை சோதனையிட்டனர்.
அதில், 16 கிலோ எடையிலான, 'யாபா' போதை மாத்திரைகள் இருந்ததை கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.
இவற்றின் சர்வதேச மதிப்பு 16 கோடி ரூபாய் என தெரிய வந்துள்ளது.