டி20 'சாம்பியன்' நியூசி.,க்கு ரூ.19.6 கோடி பரிசு; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா?
டி20 'சாம்பியன்' நியூசி.,க்கு ரூ.19.6 கோடி பரிசு; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா?
UPDATED : அக் 21, 2024 03:53 PM
ADDED : அக் 21, 2024 02:30 PM

மும்பை: உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற நியூசிலாந்து அணிக்கு ரூ.19.6 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
மகளிர் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த பைனலில் தென்னாப்ரிக்காவை தோற்கடித்து முதல்முறையாக நியூசிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. முதல் இரு டி20 உலகக்கோப்பை தொடரில் பைனல் வரை முன்னேறிய நியூசிலாந்து அணி, இந்த முறை கோப்பை வென்று அசத்தியுள்ளது.
சாம்பியன் பட்டத்தை வென்ற நியூசிலாந்துக்கு ரூ.19.60 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, 2ம் இடம் பிடித்த தென்னாப்ரிக்காவுக்கு ரூ.9.80 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. அரையிறுதியில் தோல்வியடைந்த ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு தலா ரூ.5.7 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
குரூப் ஸ்டேஜ் பிரிவோடு வெளியேறிய அணிகளின் தரவரிசை உறுதி செய்யப்படாத நிலையில், இந்திய அணி 6வது இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது. எனவே, ரூ.2.25 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்பட உள்ளது. அதேபோல, இந்தப் பிரிவில் சிறப்பாக விளையாடிய மற்ற 3 அணிகளுக்கும் இதே தொகை வழங்கப்படும்.