ரூ.20 கோடி பண மோசடி வழக்கு: கேரளாவில் முன்னாள் எம்.எல்.ஏ.,உள்ளிட்ட இருவர் கைது
ரூ.20 கோடி பண மோசடி வழக்கு: கேரளாவில் முன்னாள் எம்.எல்.ஏ.,உள்ளிட்ட இருவர் கைது
ADDED : ஏப் 09, 2025 10:33 PM

புதுடில்லி: ரூ.20 கோடி பணமோசடி வழக்கில் கேரள முன்னாள் ஐ.யு.எம்.எல். எம்.எல்.ஏ., மற்றும் கூட்டாளியை அமலாக்கத்துறை கைது செய்தது..
அமலாக்கத்துறை அறிக்கை:
முதலீட்டாளர்களின் மோசடி தொடர்பான ரூ.20 கோடி பணமோசடி வழக்கில், கேரள முன்னாள் எம்.எல்.ஏ. மற்றும் அவரது நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரை கைது செய்யப்பட்டனர்.
மஞ்சேஸ்வரம் தொகுதியைச் சேர்ந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் (ஐயுஎம்எல்) முன்னாள் எம்.எல்.ஏ.வும், ஃபேஷன் கோல்ட் குழும நிறுவனங்களின் தலைவருமான எம்.சி. கமாருதீன் மற்றும் நிறுவன நிர்வாக இயக்குநர் டி.கே. பூக்கோயா தங்கல் ஆகியோர் ஏப்ரல் 7 ஆம் தேதி காவலில் எடுக்கப்பட்டனர்.
கோழிக்கோட்டில் அமைந்துள்ள சிறப்பு பணமோசடி தடுப்புச் சட்டம் நீதிமன்றம், (பி.எம்.எல்.ஏ) இருவரையும் ஆஜர்படுத்திய பின்னர், அவர்களை இரண்டு நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைக்க உத்தரவிட்டது.