ADDED : அக் 09, 2024 04:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹைதராபாத்: இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டனும், காங்கிரஸ் முன்னாள் எம்.பி.,யுமான முகமது அசாருதீன், 61; ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத் தலைவராக, 2019 - 22ல் இருந்தார். அப்போது கிரிக்கெட் சங்கத்தில், 20 கோடி ரூபாய் நிதி மோசடிகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன.
இது தொடர்பாக மாநில போலீஸ் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கிறது. இதில் நடந்துள்ள பணமோசடி தொடர்பாக, அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி, அசாருதீனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
அதன்படி நேற்று ஆஜரான அசாருதீனிடம், அமலாக்கத் துறை அதிகாரிகள் நீண்ட நேரம் விசாரித்தனர்.

