ADDED : மார் 12, 2024 11:16 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொப்பால் : ''நான் ஐ.பி.எல்., வீரர் போன்றவன். வாய்ப்பு கிடைக்கும் இடத்தில் விளையாடுவேன்,'' என கல்யாண ராஜ்ய பிரகதி கட்சி எம்.எல்.ஏ., ஜனார்த்தன ரெட்டி தெரிவித்தார்.
கொப்பாலில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கொப்பாலில் உள்ள அஞ்சனாத்ரி பகுதி வளர்ச்சி பணிகளுக்கு, பட்ஜெட்டில் 100 கோடி ரூபாயை முதல்வர் சித்தராமையா அறிவித்து உள்ளார். இதுபோன்று ஆண்டுதோறும் தருவதாக கூறியுள்ளார்.
பா.ஜ.,வுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என்றால், பிரதமர் நரேந்திர மோடி, லோக்சபா தேர்தல் அறிவிப்பதற்கு முன்னரே, அஞ்சனாத்ரி வளர்ச்சிக்கு, 2,000 கோடி ரூபாய் ஒதுக்குவதாக அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

