விபத்தில் பலியான வாலிபர் குடும்பத்துக்கு ரூ.32 லட்சம் இழப்பீடு
விபத்தில் பலியான வாலிபர் குடும்பத்துக்கு ரூ.32 லட்சம் இழப்பீடு
ADDED : நவ 06, 2025 12:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: புதுடில்லியைச் சேந்த கிருஷ்ணன் கோபால், 23, கடந்த 2023ம் ஆண்டு ஆக.21ம் தேதி ஸ்கூட்டரில் சென்றார்.
சரிதா விஹார் மெட்ரோ நிலையம் அருகே, அதிவேகமாக வந்த லாரி, ஸ்கூட்டர் மீது மோதியது. தூக்கி வீசப்பட்ட கிருஷ்ணன், அதே இடத்தில் உயிரிழந்தார்.
இழப்பீடு கேட்டு கிருஷ்ணன் குடும்பத்தினர் தாக்கல் செய்த மனுவை, டில்லி மோட்டார் வாகன விபத்து உரிமை கோரல் தீர்ப்பாயத் தலைவர் ஷெல்லி அரோரா விசாரித்தார்.
கடந்த அக். 30ல் விசாரணை நிறைவடைந்தது. விபத்தில் உயிரிழந்த கிருஷ்ணன் கோபால் குடும்பத்துக்கு, 32.93 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, 'தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்' நிறுவனத்துக்கு ஷெல்லி அரோரா உத்தரவிட்டார்.

