பிரதமரின் வெளிநாட்டு பயணத்துக்கு 5 ஆண்டுகளில் ரூ.362 கோடி செலவு
பிரதமரின் வெளிநாட்டு பயணத்துக்கு 5 ஆண்டுகளில் ரூ.362 கோடி செலவு
ADDED : ஜூலை 26, 2025 06:21 AM
புதுடில்லி : பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கு, ஐந்து ஆண்டுகளில், 362 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது. இதில் நடப்பாண்டில் இதுவரை மட்டும், 67 கோடி ரூபாய் செலவாகி உள்ளது.
பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண செலவுகள் தொடர்பாக, ராஜ்யசபாவில், திரிணமுல் காங்., - எம்.பி., டெரெக் ஓ பிரையன் எழுப்பிய கேள்விக்கு, பா.ஜ.,வைச் சேர்ந்த வெளியுறவு இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் அளித்த பதில்:
கடந்த 2021 - 2025 ஜூலை வரை, அரசுமுறை பயணமாக, 20 நாடுகளுக்கு பிரதமர் மோடி சென்றுள்ளார். இதில், 2021 - 24 வரை, 295 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது. அதே சமயம் நடப்பாண்டில் இதுவரை, 67 கோடி ரூபாய் செலவாகி உள்ளது.
வெளிநாட்டு பயணங்களுக்கு, 2021ல், 36 கோடி; 2022ல், 56 கோடி; 2023ல், 93 கோடி; 2024ல், 109 கோடி ரூபாய் செலவாகி உள்ளது. 2023ல், பிரதமர் மோடி எகிப்துக்கு சென்ற போது, அவரது பயண விளம்பரத்துக்கு மட்டும், 11.90 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது.
இவ்வாறு பதிலில் கூறப்பட்டிருந்தது.
பயண செலவு
ஆண்டு ரூ.கோடியில்
2021 36
2022 56
2023 93
2024 109
2025 ஜூலை 67