மூணாறு:கேரளா, திருச்சூரைச் சேர்ந்த மனோஜ் ஜி.நாயர் நீண்ட காலமாக மூணாறில் வசித்து வருகிறார். தற்போது இவர் நகரில் கோயில் ஒன்றை பராமரித்து வருகிறார்.
இந்நிலையில் மத்திய அரசின் பிரபல எண்ணெய் நிறுவனம் சார்பில் காஸ் ஏஜன்சி வழங்குவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக 'ஆன்லைன்' வாயிலாக அறிந்தார். அதற்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்தார். எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கையெழுத்து, சீல் உட்பட ஆவணங்கள் அசல் போன்று இருந்ததால், அவற்றை உண்மை என மனோஜ் எண்ணினார். அதனால் எண்ணெய் நிறுவனம் சார்பில் கேட்கப்பட்ட ரூ.40 லட்சத்தை பல தவணையாக வங்கி மூலம் பட்டுவாடா செய்தார்.
அதன்பிறகு எவ்வித தகவலும் இல்லாததால் மத்திய அரசின் எண்ணெய் நிறுவனத்திற்கு நேரடியாக சென்றார். அங்கு விசாரித்த போது தான் ஏமாற்றப்பட்டது மனோஜ்க்கு தெரியவந்தது. அவர், மூணாறு போலீசில் புகார் அளித்தார்.போலீசார் விசாரிக் கின்றனர்.