ADDED : ஜன 22, 2025 08:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:தெற்கு டில்லி சங்கம் விஹாரில், போலீஸ் நடத்திய வழக்கமான சோதனையில், காரில் இருந்த 47 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
சங்கம் விஹாரைச் சேர்ந்த வசீம் மாலிக்,24, என்பவர் ஓட்டி அந்த காரை நிறுத்திய போலீசார், அதில் இருந்த பணத்துக்கு ஆவணங்களைக் கேட்டனர். ஆனால், மாலிக்கிடம் ஆவணம் இல்லை. இதையடுத்து, 47 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த போலீசார், அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து, வருமான வரித் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
டில்லியில் தேர்தல் நடத்த விதிமுறைகள் அமலில் உள்ளது.

