ரூ.500 கோடி முறைகேடு: ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை
ரூ.500 கோடி முறைகேடு: ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை
ADDED : ஆக 26, 2025 10:13 PM
புதுடில்லி:அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக, பி.பி.டி.பி., என்ற பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடிச் சோதனை நடத்தினர்.
டில்லி, நொய்டா, பரிதபாத் ஆகிய பகுதிகளை மையமாக வைத்து செயல்படும், பி.பி.டி.பி., என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது, அன்னிய செலாவணி விதிமீறலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
இதன் அடிப்படையில், அந்த நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர். இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து அமலாக்கத்துறை வட்டாரங்கள் கூறியதாவது:
மொரீஷியஸ் நாட்டைச் சேர்ந்த நிறுவனத் திடமிருந்து, கடந்த, 2007 - 2008ம் ஆண்டில், 500 கோடி ரூபாய் முதலீட்டை பெற்ற விவகாரத்தில், அன்னிய செலாவணி விதிமீறல் நடந்ததாக புகார் வந்ததை அடுத்து, சோதனை நடத்தப்பட்டது.
விசாரணை முடிவில் இது தொடர்பான முழு விபரமும் வெளியிடப்படும்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.