sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 30, 2026 ,பங்குனி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஐடிஎப்சி வங்கியில் ரூ.590 கோடி மோசடி: யாரும் தப்ப முடியாது என்கிறார் ஹரியானா முதல்வர்

/

ஐடிஎப்சி வங்கியில் ரூ.590 கோடி மோசடி: யாரும் தப்ப முடியாது என்கிறார் ஹரியானா முதல்வர்

ஐடிஎப்சி வங்கியில் ரூ.590 கோடி மோசடி: யாரும் தப்ப முடியாது என்கிறார் ஹரியானா முதல்வர்

ஐடிஎப்சி வங்கியில் ரூ.590 கோடி மோசடி: யாரும் தப்ப முடியாது என்கிறார் ஹரியானா முதல்வர்


ADDED : பிப் 23, 2026 09:10 PM

Google News

ADDED : பிப் 23, 2026 09:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சண்டிகர்: 'ஐடிஎப்சி வங்கி ரூ.590 கோடி மோசடியில் தொடர்புடைய எவரும் தப்ப முடியாது,' என்று ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி கூறியுள்ளார்.

சண்டிகரில் உள்ள கிளையில் அரசுத் துறையின் கணக்கை மூடச் சென்றபோது, கணக்குப் புத்தகத்தில் இருந்த தொகைக்கும் வங்கியின் கணினியில் இருந்த தொகைக்கும் வித்தியாசம் இருந்ததால் இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. வங்கி ஊழியர்களுக்கும் வெளி நபர்களுக்கும் இடையிலான கூட்டுச் சதி மற்றும் போலி பரிவர்த்தனைகள் இதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பங்குச்சந்தையில் ஐடிஎப்சி பர்ஸ்ட் பேங்க் பங்குகள் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தன.

இதனை தொடர்ந்து,இந்த மோசடி வழக்கு ஊழல் தடுப்புப் பிரிவு, விழிப்புணர்வுத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த மோசடி குறித்து ஹரியானா சட்டமன்றத்தில் முதல்வர் நயாப் சிங் சைனி அறிவித்ததாவது:

ஐடிஎப்சி பர்ஸ்ட் பேங்க், ஏயு ஸ்மால் பைனான்ஸ் பேங்க் ஆகியவற்றை அரசுப் பணிகள் தொடர்பான பரிவர்த்தனையை ஹரியானா அரசு நீக்கியுள்ளது. வங்கி மோசடியில் தொடர்புடைய எவரும் தப்ப முடியாது, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒவ்வொரு பைசாவும் திருப்பித் தரப்படும்.

அனைத்து அரசுத் துறைகளும் இந்த வங்கிகளில் உள்ள கணக்குகளை உடனடியாக மூடிவிட்டு, பணத்தை வேறு வங்கிகளுக்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு நயாப் சிங் சைனி அறிவித்தார்.






      Dinamalar
      Follow us