தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ ரூ.82 கோடி போதை பொருள் மணிப்பூர், அசாமில் பறிமுதல்

ரூ.82 கோடி போதை பொருள் மணிப்பூர், அசாமில் பறிமுதல்

ரூ.82 கோடி போதை பொருள் மணிப்பூர், அசாமில் பறிமுதல்


ADDED : செப் 04, 2026 09:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 04, 2026 09:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இம்பால், செப். 5–

வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர் மற்றும் அசாமில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி சோதனையில் 82 கோடி ரூபாய் மதிப்புள்ள ‘பிரவுன் சுகர்’ மற்றும் ‘யாபா’ போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

வடகிழக்கு மாநிலங்களில் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளைச் சீர்குலைத்து, சட்டவிரோத போதைப்பொருட்களின் நடமாட்டத்தைத் தடுக்கும் முயற்சியில் நம் ராணுவத்தின் ஒரு பிரிவான, ‘ஸ்பியர் கார்ப்ஸ்’ எனப்படும், உயரடுக்கு போர்ப்படைப்பிரிவு ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் மணிப்பூர் தலைநகர் இம்பாலிலிருந்து அசாமின் கச்சார் பகுதிக்கு லாரியில் கடத்தப்பட்ட போதை பொருளை மணிப்பூரின் ஜிரிபாம் பகுதியில் போலீசார் நேற்று தடுத்தனர். அந்த லாரியை சோதனையிட்டபோது அதில் இருந்த 10.891 கிலோ பிரவுன் சுகரை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 80 கோடி ரூபாய்.

இதேபோல் அசாமின் பதார்பூரில் இரு வாகனங்களில் கடத்தி வரப்பட்ட யாபா போதை மாத்திரைகளை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். இதன் சந்தை மதிப்பு 2.50 கோடி ரூபாய்.

மணிப்பூர் மற்றும் அசாம் ஆகிய இரு மாநிலங்களிலும் பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருளின் மொத்த மதிப்பு 82 கோடி ரூபாய். போதை பொருள் கடத்தல் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us