ரூ. ஒரு கோடி போதை பொருள் பறிமுதல்: மூன்று பேர் கைது
ரூ. ஒரு கோடி போதை பொருள் பறிமுதல்: மூன்று பேர் கைது
UPDATED : அக் 14, 2026 03:47 PM
ADDED : அக் 14, 2026 03:44 PM
முசாபர்நகர்: உத்தர பிரதேசத்தில் கடும் துப்பாக்கிச் சண்டைக்குப் பின், போதைப் பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த, மூன்று பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 1.10 கோடி ரூபாய் மதிப்புள்ள, ‘ஸ்மாக்’ என்ற போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
உ.பி., மாநிலம், முசாபர்நகர் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த உஸ்மான், பாப்ரி மற்றும் ஜாஹிர் ஆகிய மூவரும் போலீசை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.
போலீஸ் கொடுத்த பதிலடியில், உஸ்மான் காலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து சரிந்தார். மூன்று பேரையும் சுற்றி வளைத்த போலீசார், அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 1.10 கோடி ரூபாய் மதிப்புள்ள 590 கிராம் ஸ்மாக் என்ற போதைப் பொருள் மற்றும் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அரசு மருத்துவமனையில் உஸ்மான் சேர்க்கப்பட்டார். விசாரணை நடக்கிறது.
