தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/'குருவி'கள் மட்டுமே பிடிபடும் மர்மம் என்ன: கேட்கிறார் இ.பி.எஸ்.,

'குருவி'கள் மட்டுமே பிடிபடும் மர்மம் என்ன: கேட்கிறார் இ.பி.எஸ்.,

'குருவி'கள் மட்டுமே பிடிபடும் மர்மம் என்ன: கேட்கிறார் இ.பி.எஸ்.,


UPDATED : செப் 27, 2024 02:14 PM

ADDED : செப் 27, 2024 01:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 27, 2024 02:14 PM ADDED : செப் 27, 2024 01:01 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: சென்னை துறைமுகத்தில் ரூ.110 கோடி மதிப்புள்ள போதை பொருள் சிக்கிய விவகாரத்தில் மத்திய, மாநில போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்., வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் வருமாறு;

சென்னை துறைமுகத்தில் 110 கோடி ரூபாய் மதிப்புள்ள 112 கிலோ Pseudoephedrine என்ற போதைப் பொருளை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர் என்ற செய்தி வெளி வந்துள்ளது.

போதைப் பொருட்களின் கேந்திரமாக தமிழகம் மாற்றப்பட்டு உள்ளதற்கு காரண கர்த்தாக்கள் யார் ? சூத்திரதாரிகள் யார்-யார் ? என்பது நன்கு தெரிந்திருந்தும், ஆணிவேர் எங்கிருக்கிறது என்று தெரிந்திருந்தும், அவர்கள் மீது சட்டத்தின் இரும்புப்பிடி நீளாமல், கடத்தலில் ஈடுபடும், குருவிகள் என்றழைக்கப்படும், சிறு, சிறு கடத்தல் வேலை செய்யும் ஒருசிலரை மட்டும் மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் பிடிக்கும் மர்மம் என்ன?

தொடர்ந்து இதுபோன்ற போதைப் பொருள் கடத்தல், விற்பனை தொடர்ந்தால், தமிழக இளைஞர்கள் மட்டுமல்ல, இந்தியாவின் எதிர்காலமே பாழாகும் என்பதை நினைவில் நிறுத்தி போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகள் மீது சம்பந்தப்பட்ட மத்திய, மாநில காவல்துறை அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் இ.பி.எஸ்., குறிப்பிட்டு உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us