UPDATED : மே 20, 2025 06:41 AM
ADDED : மே 20, 2025 06:27 AM
புதுடில்லி:டில்லியில், என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் மத்திய கல்வி வாரியத்தின் புத்தகங்களை அச்சடித்து விற்ற மூன்று பேர் கைது செய்யப்பட்டு, 2.4 கோடி ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து, ஷாதாரா போலீஸ் துணை கமிஷனர் பிரசாந்த் கவுதம் கூறியதாவது:
மத்தியல் கல்வி வாரியத்தின் பாடப்புத்தங்களை சட்டவிரோதமாக தயாரித்து விற்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அதிரடி சோதனை நடத்தி, பிரசாந்த் குப்தா,48 மற்றும் அவரது மகன் நிஷாந்த் குப்தா,26, ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு போலி புத்தகங்களை விற்ற அரவிந்த் குமாரும் கைது செய்யப்பட்டார்.
அலிப்பூர் ஹிராங்கியில் உள்ள அரவிந்தின் கிடங்கில் 2.4 கோடி ரூபாய் மதிப்புள்ள போலி பாடப்புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணை நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.