தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/மும்பையில் பிரபல தொழிலதிபரின் ரூ.332 கோடி சொத்து முடக்கம்

மும்பையில் பிரபல தொழிலதிபரின் ரூ.332 கோடி சொத்து முடக்கம்

மும்பையில் பிரபல தொழிலதிபரின் ரூ.332 கோடி சொத்து முடக்கம்


UPDATED : ஜூலை 26, 2026 08:37 PM

ADDED : ஜூலை 26, 2026 06:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 26, 2026 08:37 PM ADDED : ஜூலை 26, 2026 06:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மும்பை: மஹாராஷ்டிராவில், நில முறைகேடு வழக்கில், பிரபல தொழிலதிபர் பிரபுதாஸ் விர்சந்த் லோடியாவுக்கு சொந்தமான, 332.24 கோடி ரூபாய் சொத்துகளை அமலாக்கத் துறை நேற்று முடக்கியது.

மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்தவர் பிரபுதாஸ் விர்சந்த் லோடியா. தொழிலதிபரான இவர், 'ரங்ஷார்தா பிரதிஷ்டான்' அறக்கட்டளையின் நிர்வாகிகளில் ஒருவராகவும் இருந்தார். மராட்டிய நாடகம், இலக்கியம் மற்றும் கலை, கலாசார நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில், மஹாராஷ்டிரா வீட்டுவசதி வாரியம், மும்பை பாந்த்ராவில் உள்ள அரசு நிலத்தை, இந்த அறக்கட்டளைக்கு, 1986ல் சலுகை விலையில் வழங்கியது.

இந்த நிலத்தில் நாடக அரங்கம் மற்றும் கலைஞர்களுக்கான தங்குமிடங்களை மட்டுமே கட்ட வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது. ஆனால், தொழிலதிபர் பிரபுதாஸ் விர்சந்த் லோடியா, தன், 'ரங்ஷார்தா ஹோட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட்' நிறுவனம் மூலம், இந்த நிலத்தை முழுமையாக ஆக்கிரமித்து, வணிக ரீதியிலான ஹோட்டல் மற்றும் மதுபான கூடமாக மாற்றினார்.

தொடர்ந்து, 2020ல் அந்த அறக்கட்டளையின் அப்போதைய நிர்வாகிகள், தொழிலதிபர் பிரபுதாஸ் விர்சந்த் லோடியா மற்றும் அந்த ஹோட்டலின் பங்குதாரர்கள் மீது போலீசில் புகார் அளித்தனர். இதன்படி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பாக, அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப் பதிவு செய்தது.

அந்த சொத்தில் உருவாக்கப்பட்ட வணிக இடங்கள் அனுமதியின்றி விற்கப்பட்டதாகவும், அதன் மூலம் கிடைத்த வருவாயை, பிரபாதேவி பகுதியில் மற்றொரு சொத்து வாங்க பயன்படுத்தப்பட்டதும் விசாரணையில் தெரிய வந்தது. மொத்தம், 512 கோடி ரூபாய் வரை லாபம் ஈட்டியதும் கண்டறியப்பட்டது.

இந்நிலையில், தொழிலதிபர் பிரபுதாஸ் விர்சந்த் லோடியா மற்றும் பங்குதாரர்களுக்கு, மும்பை பாந்த்ராவில் உள்ள ஹோட்டல் ரங்ஷார்தா மற்றும் பிரபாதேவி பகுதியில் உள்ள, 332.24 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்களை அமலாக்கத் துறை முடக்கியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us