sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 சமூக நல்லிணக்கத்திற்கு இந்தியாவே வழிகாட்டி: ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் பெருமிதம்

/

 சமூக நல்லிணக்கத்திற்கு இந்தியாவே வழிகாட்டி: ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் பெருமிதம்

 சமூக நல்லிணக்கத்திற்கு இந்தியாவே வழிகாட்டி: ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் பெருமிதம்

 சமூக நல்லிணக்கத்திற்கு இந்தியாவே வழிகாட்டி: ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் பெருமிதம்

11


ADDED : பிப் 16, 2026 04:00 AM

Google News

11

ADDED : பிப் 16, 2026 04:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோரக்பூர்: ''சமூக நல்லிணக்கம் மற்றும் நல்லெண்ணத்திற்கான உலகளாவிய மையமாக நம் நாடு திகழ்கிறது. வெளிநாடுகளில் உறவுகள், எதிர்பார்ப்புகள் கொண்டவையாக உள்ளன. ஆனால், நம் நாட்டில் உறவுகள் என்பது உணர்வுகளால் கட்டமைக்கப்பட்டுள்ளன,'' என ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பாபா கம்பீரநாத் அரங்கில் சமூக நல்லிணக்க விழா நடந்தது. இதில் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது:

உலக நாடுகளில் உறவுகள் எதிர்பார்ப்புகள் கொண்டவையாக, பொருள் சார்ந்தவையாக இருக்கின்றன. ஆனால், நம் நாட்டில் மனித உறவுகள் அப்படி அல்ல. உணர்வுபூர்வமாக பின்னி பிணைந்துள்ளன.

நல்லெண்ணம் மற்றும் சமூக நல்லிணக்கத்துக்கு உலகளாவிய மையமாக நம் நாடு திகழ்கிறது. நமது நாகரிகம் என்பது, ஒருவரை ஒருவர் சார்ந்து, விட்டுக் கொடுத்து வாழ்வது.

மொழி, இனம், பாரம்பரியம், பழக்கவழக்கம் ஆகியவற்றில் நமக்குள் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், அந்த வேறுபாடுகள் நம் இடையே பிரிவினையை ஏற்படுத்தியது இல்லை.

பாரதம் நமது தாய். இந்த புனித எண்ணம் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது. இது தான் தொப்புள் கொடி உறவாக நம்மை ஒற்றுமையுடன் பிணைத்து வைத்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு நுாறு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது என்பது கொண்டாட்டத்திற்கான விஷயம் அல்ல. கடந்து வந்த பாதையை சுயபரிசோதனை செய்வதற்கான தருணம்.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us